பனிக் காற்றானாய் நீ -கார்த்திகா
உன் பார்வையின்
ஸ்பரிசங்களால்
பூக்களில் குடியேற்றுகிறாய்
சொற்கள் நழுவும்
நிமிடங்கள் தழுவும் காதலின்
முன் பனிச் சாரல்களை
விரல்கள் சேரும்போது
குளிரோடியது நரம்புகளில்
சலனங்கள் உறைபனியாய்
முன்னோடிய நின்
காலடித் தடங்களில்
விழி பதித்து
செவி திறந்து வருகிறேன்
உயிரோசையை
நெஞ்சில் இருத்தி
சுகமாய் பயணித்தலில்
என்னில் தொடங்கி
என்னிலே முடியும்
உன் எல்லைகள் என்றறியும்
என் சுவாசத்தினுள் வழியும்
உன் வாசம் !