மனிதா நீ எதற்காக பிறந்தாய் - உதயா

மனிதா ...

நீ பிறந்தது
சொந்தங்களின் பந்தங்ககளை
அலங்கரிக்கவா ...?

நட்பிற்கு
பெருமை சேர்த்தோரின் பட்டியலில்
முதன்மை இடத்தினை ஆட்சி செய்யவா ...?

காதலுக்காய் மனதினில்
உலகின் எட்டாம் அதிசியத்தை
அமைத்துவிடவா ...?

நீ மாய்ந்த பின்னும்
இன்னும் மலரா விழிகளுக்காக
உன் வாழ்வினை கதையாக்க

ஒவ்வொரு பாட்டியும்
உன் சரித்திரப் பக்கங்களை
புரட்டிப் பார்க்கவா ...?

எழுதியவர் : உதயா (16-Sep-15, 8:49 pm)
பார்வை : 306

மேலே