எஸ்ராமகிருஷ்னண் ரைட்டிங்ஸ்

எஸ்.ராமகிருஷ்னண் கட்டுரைகளை அவ்வளவு எளிதாக அடுத்த பக்கத்திற்க்கு
திருப்ப முடிவதில்லை.சக மனிதர்கள் மீதான அன்பு,பாசம்,கருணை என நீளும்
அவர் கட்டுரைகள் கவிதைகள் அளவிற்கு சலனம் ஏற்படுத்துகின்றன.

என் மௌனங்களை அடர்த்தியாக்குகின்றன அவர் எழுத்துகள்.

என் உறக்கத்தின் மீது கல்லெறிகின்றன.

நதியில் தவறி விழுந்த இலையென மாற்றிவிடுகின்றன என் பொழுதுகளை.

அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள திராணியற்று கலைத்துபோடுகின்றன.

எவ்வளவுதான் எழுதினாலும் அந்த எழுத்துகளின் தாக்கத்தை முழுதாக
கூற முடியவில்லை என்னால்.(நான் எஸ்.ராமகிருஷ்னண் இல்லையே)

ஒரு சிறுகதையும்,கவிதையும் ஏற்படுத்த கூடிய கனத்தை
உரைநடைக்கும் ஏற்படுத்தியவர் எஸ்.ராமகிருஷ்னண் என்றே தோன்றுகிறது
எனக்கு.

அவர் மீதான குறைகளும்,வெறுப்புகளும் என் காதிற்கு வந்திருக்கின்றன.
அவை ஏற்றுகொள்ளும் விதமாக இருந்த போதும் அவர் மீதுள்ள ஈர்ப்பும்
அன்பும்,மரியாதையும் ஏனோ குறையவேயில்லை.

i like him.i love his writings very much

எழுதியவர் : அலைகள் (17-Sep-15, 11:09 am)
சேர்த்தது : alaigal
பார்வை : 140

மேலே