மூர்த்தி கீர்த்தி
உன் மனைவிக்கு ரட்டைக் கொழந்தைங்க பொறந்திருக்குதாமே. வாழ்த்துக்கள் நண்பா.
ஆமாம்பா. அதில் ஒன்னு பெண் கொழந்தை. இன்னொன்னு ஆண் கொழந்தை.
சரி கொழந்தைங்களுக்கு பேரு வசசுட்டீங்களா?
ம்..வச்சுட்டோம். நம்ம தமிழ் இன வழக்கப்படி அழகான இந்திப் பேருங்களா வச்சுட்டோம். பெண் கொழந்தை கீர்த்தி. ஆண் கொழந்தை மூர்த்தி.
சரி அந்தப் பேருங்களுக்கு என்ன அர்த்தம்?
அட என்னப்பா பைத்தியகாரத்தனமாக் கேக்கற. தமிழர்கள் எல்லாருமே சினிமா ரசனையிலே பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கறாங்க. அதுக்கெல்லாம் அர்த்தம் என்னன்னு கேக்கறது முட்டாள்தனம்.
தெரியாம கேட்டுட்டேன். என்னை மன்னிச்சிடு.
+++++++
கீர்த்தி=புகழ்,, மேன்மை நிலை, தன்மானம், அதிகாரமான
----
மூர்த்தி = உருவம் embodiment,otherness of the divine