இந்த வயதில் காதலா

வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு
மௌனத்தை மட்டும்
பேசிகொண்டிருந்தேன்....

வேறு என்ன செய்ய...
என்ன சொல்லி
அவள் நினைத்ததை
தவறென்று நான் சுட்டிக்காட்ட...

எது சொன்னாலும் அவள்
காதுக்குள் நுழையும்
வார்த்தைகள் மூளைக்கு
செல்லாமலே வழுக்கி
விழுந்துவிடுமே...அவளோ
காதல் போதையிலே
கிறங்கி கிடக்கும்
அகதி ஆயிற்றே!அத்தனை
உறவுகளையும் துறக்க
துணிந்த அகதி...காதலை
தவறென்று நான் உரைத்தால்
அது உண்மைக்கு நான்
இழைக்கும் துரோகம் அல்லவா...

அன்பில் கரைந்து
அக்கறையில் திளைத்து
உடல்தனை மறந்து
உயிர்வரை நுழைந்து
ஆளுமை செய்யும் காதல்
தவறென்று சொல்ல
நான் நினைக்கவேயில்லை...ஆனால்
அவளோ செழிப்பாய்
கனிந்து இனிக்க வேண்டிய
மொட்டு அல்லவா...இன்று
காதலை அர்த்தமற்று
கற்பித்துக்கொண்டு வாதுக்கு
நிற்கும் அவளை விட்டுவிட்டால்
மொட்டாகவே வாடிவிடும்
அவலம்தானே நிகழ்ந்துவிடும்...

என்ன சொல்லி அவள் நினைத்தது
தவறென்று நான் சுட்டிக்காட்ட...

வயது கோளாரென்றா
இளமையின் களியாட்டமென்றா....
நான் பேசிவிட்டால்
தேவையில்லை உன் அறிவுரை
என ஓடிவிடும் பேதையவள் என்று
வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு
மௌனத்திலேயே பேசிகொண்டிருக்கிறேன்
சில நொடிகளுக்காவது அவளை
என்னிடத்திலே இருத்தி வைக்க...

எழுதியவர் : இந்திராணி (17-Sep-15, 3:56 pm)
பார்வை : 117

மேலே