மரணத்திற்கு முன் ஒரு மனு

மனித நேயம் மறந்த மானுடமே....!!!!
ஜனனத்தின் மகிழ்ச்சியில் கேளுங்கள்.....
சதைகளின் சந்திப்பில்
ஜனனம்...
இதய கதவு அடைபடும் போது மரணம்...
அப்போது
இதயம் இயங்காது...
குருதி குன்றிவிடும் ...
நுரையீரல் நுரைக்காது.....
மூளை முடங்கி விடும் ...
கட்டியக் கோட்டை இனி
கல்லறை தான்...
கனவுகள் சிதைபடும் மனித வாழ்க்கை...
விழுது பிடித்து தேன் உண்பது போல்;
வாழும் வாழ்வில் வசந்தமாக...
வாசம் வீசும் மலராக..
தடவி போகும்
காற்றைப்போல்....
வளத்தை வளர்க்கும் மழையை.. போல்....
வளமாய் பயன்படுவோம்.....
நம்
கல்லறைக் கதவு கூட ....
நமக்காக ஒரு
நாள்..
கண்ணீர் சிந்தும்.