மாலை மாற்று
தந்த தந்த
தந்த தந்த
தந்த தந்த
தந்த தந்த
பதம்:-
தந்த –தந்த முடைய தந்தா என்பதன் விளிக்குறில்
தந்த-தந்தையே என்பதன் விளிக்குறில்(தந்தாய்)
தந்த+அது = தந்தி முகமுடைய கயமுகாசுரனை(தந்த என்றது அவனை அஃறிணையாய் அசுரனை குறிப்பதற்காம்)
அந்த-முடிவு
தந்த அதந்த= என்றாலும் தந்தி முகாசுரனை அதம்+த =வதைத்த என்றும் பொருள் கொள்க
தந்த தந்த-தந்தத்தால் தந்த என்பதாம்
தந்த=த என்பது குபேரனை குறிக்குமாயின்
தந்த தந்த என்பது= குபேர வாழ்வை தந்தருள் என்பதாம்..
தந்த எட்டு சீர் -அஷ்ட ஐஸ்வரியங்கள் தந்த
தந்த தந்த என்பதில் பதினாறு த உள்ளது
பேறு பதினாறு தந்த என்றும் பொருள் கொள்க
பொருள்:- தந்த முடையா பிள்ளையாரப்பா தந்திமுகனுக்கு(கயமுகாசுரனுக்கு) முடிவை(அந்தத்தை) தந்தத்தால் தந்தவனே,குபேரனுக்கு குபேர வாழ்வை தந்தவனே,எனக்கு குபேர வாழ்வை தந்தருள் என்பதாகும்.
1.இதுஅடி தோறும் படித்தாலும் பாடல் முழுவதும் படித்தாலும் வரும் மாலைமாற்று
2.இது த என்னும் எழுத்தில் தொடங்கி அதே த என்னும் முடியும் அந்தாதி மடக்கு
3.இதனை கோமூத்திரியாகவும் வரையலாம்
4.இது இரண்டே எழுத்திலான மடக்கு
5.தந்த என்ற ஒரே சொல் பாடல் முழுவதும் வந்து வெவ்வேறு பொருள் தந்ததால் இது இயமாவியமகம் ஆகும்
6.இதில் இன்னுமொரு சிறப்பும் உண்டு இதழோடு இதழ் ஒட்டாது பாடப்பட்டது. இந்த பாடல் முழுவதும் பாடினாலும் உதட்டோடு உதடு ஒட்டாது, உதடு குவியாது பாடப்பட்டதாகும்
7.தாளத் தட்டுப் போல் பாடப் பட்ட கணபதி துதி
8.ஒரே அடிபோல் நான்கு அடிகளும் பாடிய ஏக பாதம் ஆகும்
9. இது கயமுகாசுரனை கணபதி வென்ற கதையைப்பாடும் காதைக் கரப்பும் ஆகும்
10.இது பல சித்திரகவிகளைக் கொண்ட விசித்திரகவி ஆகும்.