நாளைய விடியல்

உலகம் தகித்து கிடக்கிறது
உன் ஒரு சொட்டு நீர் தெளி...

எத்தனித்து நிற்கும் காலத்திற்கு
எழுத்தாணி உடை பூட்டு..

சுள்ளிக்காட்டு முட்கள் தவிர்த்து
நீளச் செல்லும் நடை பாதையாக்கு...

மாறாமல் இருக்கும் மாற்றத்தில்
மதியணிந்து ஆடித்திரி...

போர் தொடுக்கும்
புரட்சியும் உன்னிலிருந்தே....
அறம் விடுக்கும்
அகிம்சையும் உன்னிலிருந்தே...

கிழித்தெறியும் உலகம் உன்னை
பரவாயில்லை..
ஒளியின் ஊடுருவலை
காற்றும் கைமறைக்காது....

கால இருட்டில் கண்ணாடியாய் மிளிர் ...
வலிகளில் பிரசவித்தது போதும் ..
உனக்கும் உனக்குமே
நேர்காணல் நடத்து..

விட்டில் பூச்சியின் சகவாசம் தடுத்து
விருந்து கேட்கும் பருந்தாய் பற..

உன்னை உன்னில் பிரசங்கம் செய்..
உன் ஒளியின் சிறுபொறி
இருட்டை அளிக்கட்டும்...
விடியல் பகிரட்டும்...

பழைய நேற்றுகளை
அழித்து வை..
புதிய நாளைகளை
அவிழ்த்து வை..

விதையும் நீதான்......
விருட்சமும் நீதான்......
விடியலின் ஒளியும் நீதான்........

எழுதியவர் : கௌசல்யா செல்வராஜ் (19-Sep-15, 3:34 pm)
Tanglish : naalaiya vidiyal
பார்வை : 134

மேலே