எப்படி கேட்பது கேள்வி
கேள்வி கேட்கத் தெரிவதில்லை
யாருக்கும்.
இருக்கும் பதில்களுக்கான
கேள்விகளையே,
இல்லாதவற்றின் கேள்விகளாய்
கேட்டுத் தெளிகிறார்கள்.
சில வேளைகளில்
பதில்களை வைத்துக் கொண்டு,
கேள்விகளை
தேட வேண்டியிருக்கிறது.
தகிக்கும் சூரியனிடம்,
”ஏன் என்னை சுட்டாய்” என
கேட்டு நடக்கும்
பித்தனிடம் இருக்கிறது.....
பதில்களே இல்லாத
கேள்விகள் பல......!