உலக ஓசோன் தினம் -செப்டம்பர் 16

பிரபஞ்சத்தின்
ஒரு பிரளயத்தில்
பூமிகா பிறந்தாள்!

அவள்
பசுமை தெளித்து
பருவ மானாள்1

அப்போது
கறியை கரியாக்கும்
காஸ்மிக் கண்கொண்டு
ஆதவன் அவளை
அடங்காமல் பார்த்தான்!

பூமிகாவால்
பொறுக்க முடியவில்லை!
ஒட்டிப் பிறந்த
ரெட்டை ராணிகளை
பிரசவித்தாள்!

அவர்களின் பெயரை
இப்போது விஞ்ஞானம்
கண்டுபிடித்தது
ஓ2 என்று!

அடங்காத
அந்த சூரியனின்
காஸ்மிக் கண்ணைக்
கட்டிப்போட
அந்த ரெட்டை ராணிகள்
ஆகாயம் நோக்கி
அலை பாய்ந்தார்கள் !

சென்றவர்கள்
சிதைந்து போனார்கள்
காஸ்மிக் கண்ணனின்
கனல் பார்வையால்
அவர்கள் தனித்தனியாய்
பிரிக்கபட்டார்கள்!

பிரிந்தவர்கள்
பின்வாங்கவில்லை
அங்கேயே அலைந்தார்கள்!

பூமிகா
பொறுமை இழந்தாள்
பிரசவித்து பிரசவித்து
ரெட்டை ராணிகளை
பெற்றுப் போட்டாள்!

மேலே சென்ற
ஒரு ரெட்டை ராணி
ஒரு ஒற்றை ராணியோடு
சேர்ந்து
முறிக்கமுடியாத
முத்தரசிகளாய் ஆனார்கள்!

அந்த
முறிக்கமுடியாத முத்தரசிகள்தான்
ஓசோன் எனப்பட்டது!

அந்த முத்தரசிகளை
காஸ்மிக் கண்ணனால்
கலைக்க முடியவில்லை!

உயரத்தில்
ஓசோன் படலம்
உறுதியாய் சூழ்ந்து
குடை போல் ஆனது
பூமிகாவிற்கு!

இதமான கனலும்
சுகமான குளிரும்
மழையும் வளமும்
மகிழ்வுடன் பெற்றாள்
பூமிகா!

அப்போது பூமிகாவிற்கு
மனிதன் என்ற
கிறுக்கன் பிறந்தான்!

அவன்
சோலைகளை மழித்தான்
சொந்த நிலம் காண

காடுகளை அழித்தான்
தன சொந்த வீடு காண

அது மட்டுமா
கார் வண்டியென
ஏசி கூலரென
அவன் சுகபோக
வாழிவிலே
கார்பன் மோனாக்சைடு
என்ற காட்டுமிராண்டி
பிறந்தான்!

காஸ்மிக் கண்ணனால்
முறிக்கமுடியாத
அந்த முத்தரசிகளை
கார்பன் மோனாக்சைடு
என்ற காட்டுமிராண்டி
கலைத்துப் போட்டான்!

ஓசோனில்
விழுந்தது ஓட்டை!

தமிழிலே
கா என்றால்
சோலை!

இப்போது பூமிகாவிடம்
பூமி மட்டுமே இருக்கிறது
கா இல்லை!

மனிதன் நினைத்தால்
பூமிகாவிற்கு
மறு பிறவி
தரலாம்!

அதற்கு
வீட்டு வாசல் சும்மா கெடக்குது-அட
வேப்பமரம் வைக்கலாமே

தெருவோரம் சுமமாகெடக்குது-நல்ல
தேக்குமரம் வைக்கலாமே

சாலையோரம் சும்மா கெடக்குது-நாம
ச்கலமரம் வைக்கலாமே

எல்லக்கொல்ல சும்மா கெடக்குது-அத
இலுப்பதோப்பு ஆக்கலாமே

மான்யகொல்ல சும்மா கெடக்குது -நல்ல
மாந்தோப்பு ஆக்கலாமே

வயல்வரப்பு சும்மா கெடக்குது -அட
வளர்தென்னை வைக்கலாமே

வயல்வேலி சும்மா கெடக்க்து-அங்கு
வாடாபனை வைக்கலாமே

நத்தமெல்லாம் சும்மா கெடக்குது-அங்க
நாவல்மரம் வைக்கலாமே

பொட்டவெளி சும்மா கெடக்குது
பூவரசம் வைக்கலாமே!

மரம் வளர்ப்போம்
மண்ணைக் காப்போம்
பூமிகா
மறுபிறவி எடுக்கட்டும்!

எழுதியவர் : ஜெயபாலன் (21-Sep-15, 3:38 pm)
சேர்த்தது : ஜெயபாலன்
பார்வை : 1385

மேலே