சொர்க்கத்தில் ஒரு குரல்

கடவுள் :: சித்திர குப்த்தா இன்று நம் அவைக்கு எத்தனை வரவுகள்..

சித்திர குப்த்தார்:: இந்த இளம் நரனோடு சேர்த்து 12 தேவதேவா..

கடவுள் :: இந்த இளம் நரன் என்ன செய்தான் .. ஆயுள் குறவா???

சித்திர குப்த்தார் :: ஆயுள் எல்லாம் படு கெட்டி தேவா.. தொலைபேசியில் fb யில் like போட்டுக்கொண்டே இவனின் life யை தொலைத்து விட்டான்.. இப்படித்தான் பூலோகத்தில் அல்பமாக உயிரை விடுகின்றனர் மகா பிரபு!!

கடவுள் :: என்ன???? ம்ம்ம்ம் அடே அற்ப நனரனே மீண்டும் உனக்கொரு பிறவி தருகிறேன்.. பூலோகத்திற்கு சென்று
" fb, WhatsApp, Viber, hike, Skype, twitter.. "
இப்படி சமூக வலைதளன்களோ, பயணிகளோ இன்றுடன் செயல்படாது எனகூறி மனித இனத்தை மீட்டுக்கொண்டுவா ........மீட்டுக்கொண்டுவா ?? இது என் ஆணை போய்வா..


நரன் : ஆகட்டும் கடவுளே.. அப்படியே செய்கிறேன்..

( இப்படி சொல்லி சென்ற நரன் அடுத்த இரண்டு நாழிகையில் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடோடோடி வந்தான் ஒரு பெரும் படையுடன்.. )

நரன் ::: கடவுளே!!! தேவா!!!! மஹா தேவா????

கடவுள் :: என்ன நரனே ஒரு ஆயுள் குடுத்து உன் சமூகத்தை திருத்து என சொன்னால்.. போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டாய்.. யாரேனும் அடித்து கொடுமை செய்தார்களா உன்னை ..

நரன் ::: அப்படி அடடிதிருந்தால் கூட பரவா இல்லை கடவுளே.. நான் பூலோகம் சென்று பார்த்த நபர்களிடம் எல்லாம் நீங்கள் சொல்லியவாறே இந்த நொடி முதல்
" fb, WhatsApp, Viber, hike, Skype, twitter.. "
இது எதுவும் செயல்படாது.. எனவே அனைவரும் இது இல்லாமல் வாழ பழக்கப்படுத்தி கொள்ளுங்கள் .. இது இறைவனின் ஆணை என்றேன்..

கடவுள் :: நல்லைதை தானே சொன்னாய்.. பிறகு ஏன் இவர்களுடன் இங்கு வந்தாய்.. அங்கேயே இனி சொர்க்கம் வந்துவிடும் நரேனே.. நீ போய்வா..

சித்திர குப்த்தார் :: மஹா பிரபு மனதை திடப்படுத்திக்கொண்டு இவன் சொல்லுவதை கேட்கவேண்டும் எனபது அடியேனின் விண்ணப்பம்..

---
கடவுளே :: என்னதான் நடந்தது ???


நரன்:: கடவுளே நான் இப்படி சொன்னதும் பொசுக்கு பொசுக்கு என்று கொசுவைபோல் அதிர்ச்சியால் மாரடைப்பு வந்து அனைவரும் மாண்டுவிட்டனர்.. இறைவா உன் மீது உள்ள பக்தியைவிட இபொழுது அதற்குதான் அடிமையாகி விட்டனர் இறைவா ??

கடவுள் :: ?????!!!!?????

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (22-Sep-15, 9:13 pm)
Tanglish : sorgathil oru kural
பார்வை : 110

மேலே