இயக்குனர் சிகரம் கேபாலச்சந்தர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
![](https://eluthu.com/images/loading.gif)
புகழ் என்னும் பூமாலை தொடுத்தவரே
நிழல் படத்தை நிஜமாக்கி எடுத்தவரே
தீந்தழலாகி நிற்கும் கோபத்தை
"தண்ணீர் தண்ணீர்" கொண்டு அனைத்தவரே!
திருநீறு பூசிய "நன்னிலம்" சீர்திருத்தவாதி
உறவுமுறை தரும் சிக்கல்களை தீர்த்தவாதி
வாழ்வியல் கொடுமைகளை எரிக்கும் ஜோதி
சமூக அவலம் சொல்லுவது இவரதுநீதி!
திரையுலக நட்சத்திரங்கள் தேம்பி நின்று!
"மழலைபட்டாள"மாய் அழுது புலம்புகின்றதே!
உனது மறைவைக் கேட்டு முதன் முதலில்
உதய சூரியனும் தேடி ஓடி வருகின்றதே!
கையளவு மனசை காலன் இன்று !
வென்று! கொண்டு சென்று விட்டானே !
மோதிரக் கை குட்டுபட நன்று !
" பூவா தலையா " போட்டு நின்றானே!
தமிழ்த் தாயகமே தத்தளித்து தவிக்குது
திரையுலக தந்தையை இழந்து துடிக்குது
"படையப்பாவை" படைத்த பிரம்மன்
"விஸ்வரூபம்" எடுத்து மீண்டும் வருவாரோ?
புதுவை வேலு