சாமத்திருடி
சாமத்திருடி
============
கண்ணாடி முன்னால் மெச்சிக்கொள்ளாதே
உன்னை நேசிக்கும் சந்தர்பத்தை
உனக்கே தரமாட்டேன் ம்ம்ம்ம்
நீயாக நேசித்திருந்தால் கூட
உன்னை இத்தனை அழகாய் நேசிக்கமுடியாது..
உனக்குளிட்டு
என்னை இப்படியே அமிழவிடு
என் காட்டம் தீராமல்
உன்வாசச் சிறையிலிருந்து
விடுதலை செய்துவிடாதே சரியா ம்ம்,,
கூடுடைப்பதில் தொடங்கி
பின்னலிடா உன் கூந்தல் கிளையியை உலுக்கி
உன் முதுகாரும் மல்லிகைச்சரங்களை
எண்ணிக் கொண்டிருந்தேன்
இந்தமுறை பூக்கள் பிரிந்த நேரத்திற்குள்
உன் பார்வை நொடிகள்
அவிழவில்லை தெரியுமா,,
இத்தனை செய்துவிட்டப்பின்னாலும்
அவள் ஒன்றுமே செயவில்லையாம் ம்ம்ம் ;)
முழியை அப்பாவியாக்கி சொல்கிறாள்,, :)
அந்த சாமத்திருடி ம்ம்ம்ம்
அனுசரன்