கணேசனுக்கு 50 ரூபாய்

மில்லை மூடி மாதங்கள் பல கடந்து விட்டது இன்னும் திறக்க பட வில்லை

அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை

வீட்டிற்கு சென்றால் குழந்தைகள் வேறு வயிற்றில் பசியுடனும் தந்தை ஏதாவது வாங்கி வருவார் என்ற ஆசையுடனும் காத்திருப்பர்

இதற்கு காட்டிலே வேடனாய் வாழ்ந்திருந்தாலாவது பசியில்லாமலாவது இருந்திருக்கலாம் என்று மனதில் புலம்பல்

இது தான் கணேசனின் வாழ்க்கை

வீட்டிற்கு செல்ல முடியவில்லை காரணம் இன்னும் உணவு பொருள் வாங்க பணம் கிடைக்கவில்லை

மதியமாகிவிட்டது சுற்றியெங்கும் உணவு கடைகள், உணவு கடைகளில் விற்பனை அமோகம்,

இதற்கு நடுவில் சுட்டெரிக்கும் வெயில் வேறு,

சாலையோரம் எங்கும் சிறிய துண்டு பிரசுரங்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என்று,

கணேசன் அந்த துண்டு பிரசுரங்களை எடுத்து கொண்டு அந்த இடத்திற்கு விரைந்து சென்று வேலை கேட்டான்,

வேலை உள்ளது , ஆனால் இப்பொழுது இல்லை ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்று கூறினர்

ஆனாலும் மகிழ்ச்சி இல்லை, காரணம் ஒரு வாரம் வரை உணவுக்கு என்ன செய்வதென்றே

தன்மானம் உள்ளதால் பிச்சையெடுக்கவும் வழியில்லை உணவுக்காக

அப்பொழுது தான் கண் தெரியாத ஒருவர் கணேசனை கடந்து சென்றார், சிறிது நேரம் கழித்து தான் கணேசனுக்கு தெரியவந்தது அவர் கடந்து செல்ல வில்லை தவறுதலாக 50ரூபாயை கீழே விட்டு சென்றார் என்று

கணேசன் கண் தெரியாதவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தான் அவரை காணவில்லை

கணேசனுக்கோ குற்ற உணர்வு அந்த பணத்தை ஏற்பதா மறுப்பதா என்று

வறுமை யாரைத்தான் விட்டுள்ளது

வறுமை நெஞ்சம் குறுகுறுக்க வயிற்றில் பசியிருக்க வேறு வழியில்லாமல் ஏற்கிறான் 50ரூபாயை

(அன்புடன் கண்டிப்பாக கருத்து தெரிவித்தும், பகிர்ந்தும், புள்ளிகலிட வேண்டும் என கேட்டுக் கொ‌ள்கிறேன்)

எழுதியவர் : விக்னேஷ் (25-Sep-15, 12:38 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 266

மேலே