நெஞ்சம் புரியலையா

உன்னை மறக்க சில கணம் முயன்றேன்
சிலமுறை தவித்தேன் பலமுறை தோற்றேன்
மறுஉயிர் ஏற்க துணிந்தேன் அதிலும் மனம் போக மறுத்தேன்
இடைவெளி விடாது இம்சை இதயத்தில் கொடுத்தாய்
இன்று வரை பதிலும் நம்பிக்கையில் தர மறுத்தாய்
ஒரு வார்த்தை உன்னிதழ் வழி கேட்க
நானும் பின்தொடர்கிறேன் உடலும் மெலிகிறேன்
உன் வார்த்தைக்கு பதில் கூற வழியில்லாது
ஆமென சொல்லி வழிமொழிந்து நகர்கிறேன்
வாய்விட்டு கதற வாய்ப்பில்லை எனக்கும்
நீ வேண்டுமென்று சொல்ல என்னிதழ் துடிக்கும்
ஒரு வார்த்தை சொல்லிவிடு இறுதிவரை துணைநிற்பேன்
யாருக்கும் தயங்காது உன்துணை வேண்டுமென்பேன்
என்னுள் மாற்றம் உன்னுள்ளே எழவில்லையோ?
உன் மௌனத்தில் எந்தன் நெஞ்சம் புண்ணாய் நோகுதடா!
நேரங்காலம் தெரியாத இதயத்திற்கும் தெரியவில்லை
நட்பென்று சொல்லி நடிக்கவும் வரவில்லை
நிஜம் இருக்க நிழலாய் வாழ முடியவில்லை
நிஜெமென தெரிந்தும் மௌனம் சாதிக்கும்
உன் நெஞ்சுக்கும் புரியவில்லை
பெண்ணெஞ்சம் பஞ்சைவிட மிருதுவென!
-----கவிதை பூக்கள்----