காவிரி ..!
முன்பெல்லாம்
தமிழ்நாட்டில்
கண்ணில்
காணுமளவு
உன்னில் நீர்..!
ஆனால் .,
தற்போது
நீ வெறும்
கானல் நீர் ..!
இளவேணில்
வந்தால் மட்டும்
கன்னடநாட்டின்
கருணை
தமிழன் மீது
விழுந்தால் மட்டும்
கண்ணில்
காணும் நீர்..
கன்னட நாட்டில்
சீறி பாயும் நீ .!
தமிழ்நாட்டின்
பெயரை கேட்டாலே
பெட்டி பாமபாய்
மறைவதேனோ ..?
புகுந்த வீட்டை
புற்க கணிப்பதேனோ ..?
நீ ..!
தமிழ் நாடுக்கு
வாராத காலங்களிலும்
தஞ்சை மண்ணில்
கடும் வெள்ளம் தான் ..!
ஆம் ..!
தஞ்சை மக்களின்
கண்ணீர் வெள்ளத்தால்
நீ வரும் பாதையில்
கடும் வெள்ளம் தான் ..!
ஒரே வேறுபாடு ..!
உப்புசுச்வை
உன்மீது கூடி இருக்கிறது
இப்போதெல்லாம் ..!