இலவு காத்த கிளிகள்


தாலாட்டும் குழந்தைக்குப் பாலில்லை
பாலூட்டும் அன்னைக்கு உணவில்லை

உணவுதரும் பூமிக்கு மழை இல்லை
மழைகொடுக்கும் வானுக்கு கருணையில்லை

உழைப்பவன் வாழ்வில் உயர்வில்லை
உண்மைக்கு இங்கே உயிரில்லை

பாமரன் வாழ்விலே நீதி இல்லை
படித்தவன் தகுதிக்கு வேலை இல்லை

மாப்பிள்ளை வாங்க பணமுமில்லை
மானத்தைவிற்க மனமுமில்லை

இல்லை என்பவைக்காக ஏங்கும் இவர்கள்
இலவு காத்த கிள்ளைகள் தாமே!

எழுதியவர் : வெ. பசுபதி ரெங்கன் (30-May-11, 9:42 am)
பார்வை : 350

மேலே