சூப்பர் மூன்

பூமிக்கு அருகில் சந்திரன் இன்று அதிகாலை வந்துவிட்டு சென்றதை உலகம் அறியுமா...?

குழம்பித் தவிக்கும் அறிவியல் ஆய்வாளர்களே...

உலகம் அழியப்போகிறதோ, இல்லையென்றால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழப்போகிறதோ...? என்றெல்லாம் நீங்கள் அஞ்ச வேண்டாம்...

இன்று பூமியில் பிறந்த என் தோழியை பார்த்து நிலவுக்கும் வாழ்த்து சொல்ல ஆசை...!!!

சுற்றுவட்ட பாதை மறந்து...
மிக அருகினில் நெருங்கிவந்து..
விடியும்வரை காத்துக்கிடந்து...
நீல மலரை பரிசாய் தந்து...
உணர்ச்சியில் உள்ளம் மகிழ்ந்து...
சற்று முன்பு நினைவு தெளிந்து... நீங்க மனமில்லாமல் பிரிந்து சென்றது...

மீண்டும் அதன் பாதை வழியே...

எழுதியவர் : முகம்மது யாசீன்.சே (28-Sep-15, 9:58 am)
சேர்த்தது : முகம்மது யாசீன்
Tanglish : soopper moon
பார்வை : 134

மேலே