நாகரிக மனிதன்

மரமின்றி
மழை பொய்த்தாலும்
மாத்திரை உண்டு வாழ்வோம்......!
காடுகளை வெட்டி
வீடுகளாக்கி
மண்தொட்டியில்
அழகுக்கு
மரம் வளர்ப்போம்.....!
பிரிவினை
வளர்க்க கலகங்கள்
செய்து பேருந்து
எரித்து புரட்சி
தொண்டுகள் பல செய்வோம்...!
எஞ்சிய உணவை
பசித்தவர்களுக்கு கொடுக்காமல்
குப்பையில் போடுவோம்......!
நட்டு வைத்த செடி
பிடுங்கி
கிரிகெட் விளையாடுவோம்....!
போராடி வாங்கிய
சுதந்திரத்தை
பணத்துக்
ஒட்டு என்று பரிசளிப்போம்.....!
நாகரிக மனிதர்கள்.....!