புதுமைப்பெண்

பெண்
அன்பின் ஆரம்பம்
அடக்கத்தின் அந்தம்
பெண்
வீரத்தின் விதை
தீரத்தின் திமிர்
பெண்
பணிவின் பிறப்பிடம்
துணிவின் இருப்பிடம்
பெண்
பொறுப்புள்ள புதல்வி
சகிப்புள்ள சகோதரி
பெண்
தியாகத்தில் தாய்
தவிப்பில் தாரம்
பெண்
கற்பின் கனல்
கனலின் கர்வம்
பெண்
உள்ளத்தில் மழலை
ஊக்கத்தின் ஊண்டுகோல்
பெண்
அறிவுரையில் ஆசான்
அரவணைப்பில் அன்னை
பெண்ணே..
உன் கண்ணின் கருவிழியில் கனலின் துணிவு...
புரியாத புதிரை புதைக்கும் புருவம்...
இடைவிடாமல் சண்டையிடும் இமைகள்..
நாணத்தோடு நகையைப்போல் ஓர் புன்னகை..
உதட்டின் வார்த்தைக்கு உருவகம் தரும் கண்கள்...
நிமிர்ந்த நன்னடை..
நேர்கொண்ட பார்வை..
பாரதி கண்ட புதுமைப்பெண்
நீதானடி கண்ணே..!!