பள்ளி வாசலில் பள்ளி அறை
" பள்ளி வாசலில் பள்ளி அறை "
பள்ளி வாசலில் பள்ளி அறை
என்று எழுதி முடிப்பதற்குள்
என்னங்க வைகுண்டம் வந்திருக்கார் என்றாள் என்னவள்
எனக்குப் புரியாமல்...
செத்த பிறகு போகிற வைகுண்டம்
இருக்கும் போதே வருதே என்று நினைவு ஊஞ்சலில் ஆடினேன்
அதற்குள் அவர் உள்ளே வந்து...
மாப்ள ஜீவாத்மா என்று கட்டி அணைத்தார்
ஏல...நீயா...
பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்பதை
பிராமணர்'கள்' சாப்பிடும் இடம் என்று படித்து
என்கையால் மண்டையில் குட்டு வாங்கின மாமேதையா என்றேன்
ஆமா...மாப்ள...இருவர் கண்களும் பனித்தன
நான் எழுதியதை பள்ளிவாசலில் பள்ளிஅறை என்று படித்தான்
அதே குட்டும் தலையில் வாங்கினான்
வைகுண்டம் கைலாசம் பரலோகம் எல்லாம் இப்படித்தான் இருக்குமோ...
பூலோகம் மட்டும் என்ன வாழுதாம் என்றான்