பேய்கள்
பேய்களின் இடத்தில்
மாட்டிக் கொண்டோம்
சுற்றியெங்கும் மரண ஓலம்
தப்பித்திட வழி தெரியவில்லை
இங்கு தங்கிடவும் முடியவில்லை
பழி தீர்க்கும் பாவங்கள்
பகடைக்காயாக மனிதர்கள்
இன்னும் எத்தனை நொடிகள்
உயிர் வாழ மீதமுள்ளதோ
அன்று செய்த பாவங்கள்
இன்று பின் தொடருதே