“ நானே உலகின் ஒளி”
“ நானே உலகின் ஒளி”
சித்திர ஓவியன் தன்
சித்திரக் கூடத்தில் நுழைந்து
விசித்திரம் படைத்ததாய்
எழுத்தாளன் தான் எழுதிய
புத்தகத்தின் பக்கங்களைப்
புரட்டிப் பார்ப்பதாய்
அவதாரம் எடுத்துத்
தன்னையேஒரு பாத்திரத்தில்
அடைத்துக் கொண்டதாய்
பரதேச நகருக்குள்
பரதேசி ஒருவன்
நுழைந்து விட்டதைப்
போலல்லாமல்
மனிதருடன் அவர்களது
சொந்தமொழியினில்
பேசிட அதிலும் வட்டார
வழக்கினில் உரையாட
மனித நாவினில்
புனிதன் கூறினான்
“ நானே உலகின் ஒளி”