வேண்டாம் விபரீத நாடகம்

தேடி ஓடிப் பொருள்சேர்க்கும்
தந்தை தாயும் பெருமைக்காக
ஆட விட்டார் அரங்கமதில்,
ஆடை அணிகலன் பூட்டியேதான்
வாடும் பயிர்போல் வாடவிட்டார்
விருப்ப மில்லா மழலைகளை,
நாடும் கல்வி அவர்களித்து
நாளை உலகுக் களிப்பீரே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Sep-15, 6:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 52

மேலே