அனுதாபம்
ங்கள் கவலைகளை நேசிக்கும் மக்களும் இருக்கிறார்கள்.சொல்லப்போனால்,அதைப் பெரிது படுத்தி,பூதாகரமாக்கி விடுவார்கள்.அவர்கள் எப்போதும் தங்கள் துயரங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.வேறு எதைப் பற்றியும் பேச மாட்டார்கள்.நீங்கள் அதைக் கேட்காமல் போனால்,அவர்கள் உங்களை விரோதியாகவே பாவித்து விடுவார்கள்.உலகில் இப்படிப்பட்டவர்களே அதிகம்.அனுதாபம் பெறவே அவர்கள் அப்படிப் புலம்புகிறார்கள்.மிகவும் நுட்பமான தன முனைப்பு அது.கவலைப் படுபவர்களைக் கண்டால் நாம் அனுதாபம் கொள்கிறோம்.அவர்களின் நிலையில் இல்லாது நாம் மகிழ்ச்சியாக இருக்கும் மன நிலையில் தோன்றும் அனுதாபம் அது.இரண்டாவதாக அனுதாபம் காட்டும்போது நம்முடைய நிலை உயர்ந்து விடுகிறது.கவலைப்படுபவர் நமது அனுதாபத்தை அன்பு என்று தவறாக நினைக்கிறார்.அனுதாபம் அன்பு ஆகாது.