எவளோ பெற்ற பெண்

=> அம்மாவாசை திதி - நீ
சாமிக்குப் படையல்
வைப்பது தீட்டு - பிற
வேலைகளைக் கவனி
என்ற மாமியார்...

அடுத்தவரின் முன்னால்
சாதம் தான் பண்ணல
என் பையனுக்கு
சாதமாவது பறிமாறலாமே
என்றவர் - சிறிது நேரத்தில்
மகனிடம் கடிகிறார்!..

ஏன்டா அடுத்தவங்க
முன்னால பழைய
பாத்திரத்தில் சாதம்
கொண்டு வந்து - என்
மானத்தை வாங்குற..

=> பழைய பாத்திரத்தை
கவனிக்கும் என் மாமியார்
என் பாத்திரத்தை
அடுத்தவர் முன்
கொச்சைப் படுத்தி
சுகம் காண்கிறார்..

=> எவளோ பெற்ற
பெண் தானே!!!..

=> வாழ்க்கைப் பாடத்தில்
பக்குவப்பட்ட
மாமியார்களே - தன்
மகளின் வயதை ஒத்த
தன் மருமகளைப்
புரிந்து கொள்ள
இயலாத பொழுது
வாழ்க்கையில்
பக்குவப்படாத - ஒரு
பெண்ணைக் கட்டிக்
கொண்டு வந்து
குணமில்லாதவள் என்று
கூறுவது என்ன நியாயம்?..

=> வினை விதைத்தவன்
வினை அறுப்பான்!!!...

எழுதியவர் : Vasuki Arun Prasad (30-Sep-15, 8:15 pm)
பார்வை : 66

மேலே