எனக்கான உலகம் அது
![](https://eluthu.com/images/loading.gif)
எனக்கான உலகம் அது..
அங்கே மனிதர்களுக்கு
இடமில்லை!
கற்பனையில் வாழ்ந்துடுவேன்
கடவுளாக நினைத்திடுவேன்
காசு பணம் தேவையில்லை
களவு போக எதுவுமில்லை!
தூக்கத்தில் சிரித்திடுவேன்
துக்கம் மறந்துடுவேன்
ஏகாந்தம் நிறையவுண்டு
ஏக்கம் எதுவுமில்லை!
ஏமாளி ஆனதுண்டு
ஏமாற்றம்
அடைந்ததில்லை!
அனுபவிக்க நிறையவுண்டு
ஆறறிவு தேவையில்லை!
ஐந்தறிவு உயிரென்று அங்கே
எதுவுமில்லை!
ஆண் பெண் பேதமில்லை
கற்பும் காதலும் அங்கில்லை!
கற்பழிப்பும் நடப்பதில்லை!
நதியோரம் நடந்திடுவேன்
கடல் நீரை ருசித்திடுவேன்!
புல்வெளியை மிதிக்காமல்
கால்கடுக்க நடந்துடுவேன்
கவலைகள் கொஞ்சமும் இருந்ததில்லை!
எனக்கான பயணம் இது
எதுவரையென்று தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை!
எறும்போடும் பேசிடுவேன்
இன்னும் எக்கச்சக்கம் நிறையவுண்டு!
பூக்களின் தேன்துளியை ருசித்துவிட்டு
தேனீயாய் பறந்துடுவேன்!
புன்னகைக்கும் பஞ்சமில்லை!
உங்களது பார்வையிலோ
பைத்தியக்காரனுக்கும் எனக்கும்
வித்தியாசமில்லை!
உங்களது பார்வையிலோ
நான் பைத்தியக்காரன்
என்னுடைய பார்வையினைச் சொன்னாலும்
உங்களுக்குப் புரியப்போவதில்லை!
என் தலைபாரமும்
என் கழுத்து அறிவதில்லை!
மூளை நியூரான் எல்லாம்
இன்னும் நீளமாய் வளர்த்திடுவேன்
சுதந்திரத்திற்கும் பஞ்சமில்லை
சூழ்நிலையும் தடுத்ததில்லை!
கற்பனையில் வாழ்ந்துடுவேன்
கடவுளாக நினைத்திடுவேன்
காசு பணம் தேவையில்லை
களவு போக எதுவுமில்லை!