கில்மா கதை

பெண் பார்த்து நிச்சயம் செய்து கல்யாணம் முடிக்கும், அண்ட் நகர வாசத்தின் வீச்சை வீட்டுக்குள் கொண்டுவராத பெரும்பான்மைகளுக்கான பதிவு இது so மொக்கை கேள்விகளை தவிர்க்கவும்.

முதல்ல பெண்லாம் பார்த்துட்டு போயி, அப்பறம் மாப்பிள்ளை நகை வேண்டாம்ன்னு சொல்லி, பெத்தவங்க மட்டும் அவங்க கவுரவம் அதில் அடங்கி இருக்குன்னு குறிப்பிட்ட நகையை பேசி முடிச்சு நிச்சயதார்த்தம் வரைக்கும் இந்த பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஒரு வழியா கொண்டு வந்திடுவாங்க. இந்த சமயத்தில் நமக்கு இருந்த ஒரு டென்சன் கொஞ்சம் முடிவுக்கு வந்திருக்கும் அது என்னன்னா, நாம பயந்துட்டே இருப்போம், நம்மள எல்லாம் இந்த மாப்பிள்ளைக்கு பிடிக்குமா? ஒரு வேளை நம்மள ரிஜெக்ட் பண்ணிட்டா என்ன பண்றது, ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்ல இருந்து தகவல் சொல்லாம போன மாதிரி போய்டுவாங்களோ, இந்த மாதிரி சந்தேகங்களை தாண்டி தான் நிச்சயதார்த்தம் நடக்கும், அப்பவும் சந்தேகம் இருக்கும்…., இவருக்கு உண்மைலேயே நம்மள பிடிச்சுருக்கா இல்ல வேற வழி இல்லாம வந்திருக்காரா? இந்த மாதிரி (vice versa also), ACTUALLY எல்லாமே நல்லபடியாதான் நடக்கும் ஆனாலும் இந்த சந்தேகத்தை ஒன்னும் செய்ய முடியாது வரத்தான் செய்யும்,

நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் தான் செல்போன் நம்பர் பரிமாற்றமே நடக்கும், (இப்ப செல்போன்ல சிம் கார்டு போட்டு கிப்டாவே கொடுத்திடறாங்க சிலர்) இப்ப தான் முதல் பிரச்சினை ஸ்டார்ட் ஆகும் ”யார் முதல்ல call பண்றதுன்னு” மாப்ள நம்பர்ல இருந்து போன் வரும்.. கடைசில பார்த்தா அதுல அவங்க அம்மா பேசுவாங்க அப்பறம் அவங்க நம்ம அம்மாக்கிட்ட பேசுவாங்க, என்னமோ இவங்க ரெண்டு பேரும் பேசிக்கத்தான் நாம போன் வச்சிருக்கற மாதிரி, போனை கட் பண்ணும்போது மாமியா சொல்லும் ”இந்தா பையன் கிட்ட ரெண்டு வார்த்த பேசிடு” அது ஒரு இக்கட்டான சூழ்நிலை இருவருக்குமே, அவங்க நல்லாருக்கிங்களா ன்னு கேட்பார் நாம ஹ்ம்ம் நல்லாருக்கேன்.. அவ்வளோ தான் அந்த கான்வோவே. பிக்காஸ் ஒரு மிகப்பெரிய தயக்கம் முன்னாடி இருக்கும் அதுக்கு காரணம் நம்மள பெத்தவங்கதான், ஏன்னா நம்மள ”இவ போன் பேசறதுக்கு அலையறாளோ!” அப்படின்னு நினைத்துவிட்டால்? நாம இவ்வளவு நாளா ரொம்ப நல்ல பொண்ணுன்னு வீட்ல பெயர் எடுத்திருக்கோமே!, அதுலாம் கெட்டுப் போய்டுமோன்னு பயம் இருக்கும், அதனாலேயே யாருக்கும் தெரியாம மறைந்து இருந்து ஒரு பத்து நிமிடம் மட்டும் பேசி, முன்னாடியே சொன்ன அந்த நமக்கு தேவையான கேள்விகள் மட்டும் கேட்டுட்டு, ஹப்பாடி உண்மைலேயே இவருக்கு நம்மள பிடிச்சிருக்குன்னு கன்பார்ம் செஞ்சுக்குவோம்,

இந்த அம்மாக்கள் இருக்காங்களே உஸ்ஸ்ஸ்ஸ் தோழியிடம் பேசுவதாக சீன்லாம் போட்டு மிக கவனமாக டி போட்டு அவர்ட்ட பேசிட்டு இருக்கும்போது ”யாரு மாப்ளையா?” ன்னுவாங்க.. தட் ஞே மூமென்ட் :))) ரொம்ப நாள் கழித்து நான் எப்படிம்மா கண்டுபிடிச்ச?ன்னு கேட்டேன்.. அதற்கு அவளின் பதில் ”நான் உன் அம்மாடி!”

அம்மாவிடம் பெர்மிசன் கிடைத்ததும் விடிஞ்சாலும் அடைஞ்சாலும் போனும் கையுமாத்தான் திரிவோம்.., எல்லாம் அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில் தான் நடக்கும், அப்பா மேல் அளவுக்கு மேல் பயம் கலந்த மரியாதை, ஒரு நாள் அப்பா கிட்டயும் மாட்டிக்குவோம்.. அப்போ பதறி எந்திரிச்சி திரு திருன்னு முழிக்கும் போது, கையாலேயே பேசு பேசுன்னு சைகை காமிச்சுட்டு சிரிச்சுக்கிட்டே போய்டுவார்… வாழ்வில் உன்னதமான தருணங்களில் அதுவும் ஒன்று.., இதுக்கு அடுத்து நம்மள கேள்வி கேட்க ஆளே இல்ல, மாப்ள வீட்ல எதுனா கேட்கனும்னா கூட நம்மகிட்ட தான் சொல்வாங்க அந்த அளவுக்கு டீப்பபா போயிருக்கும், சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை பரஸ்பரம் இருவருமே ஒரு மாசத்துல பேசி தீர்த்து முடிச்சுடுவோம்.

இப்ப அடுத்த பிரச்சினை, இந்த தோழிகள் எல்லாம் ஒன்னா சேர்ந்து ”அப்படி என்னதான்டி மணிக்கணக்கா பேசுவிங்க” அதுக கேட்கும் தோரணைலையே ஒரு டபுள் மீனிங் இருக்கும், அப்பறம் ஏற்கனவே கல்யாணம் முடித்த நம்மள விட சீனியர் தோழிகள் சொல்வாங்க ”அப்ப அப்படிலாம் நீங்க பேச ஆரம்பிக்கலையா? எப்படிக்கா ? பாவம் உம்புருசன் உன்னைய கட்டிக்கிட்டு என்ன பாடு படப்போறானோன்னு திரிய பத்த வச்சுட்டு போய்டும்., அதுல இருந்து வேற ஒரு கனவுக்கு ரெக்கை முளைச்சுடும், அதுக்கு அப்பறம் இந்த டாப்பிக்க எப்படி ஆரம்பிக்கறது என்று இருவருமே பெரிய குழப்பத்தில் இருப்பாங்க, சில மாப்பிள்ளைகள் ரொம்ப விவரமா ”நம்ம ஹனிமூன் எங்க வச்சுக்கலாம்ன்னு” தொடங்குவாங்க, அப்படி இல்லாத சில அப்பாவி மாப்பிள்ளைகளுக்கு நாமதான் எடுத்து கொடுக்கணும், ”அந்த அக்கா இப்படிலாம் சொல்லுது” அப்படின்னு.. ஆச்சா! இப்பத்திலிருந்து கல்யாணம் முடியறதுக்கு முதல் நாள் வரைக்கும் காமத்தை பற்றி தியரி எல்லாம் பேசி முடிச்சிடுவாங்க.

இப்ப அடுத்த பிரச்சினை முதலிரவுல.., எவ்வளவோ தன்னை பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டிருந்த ஆணின் எண்ணத்தில் சம்மட்டி அடி விழும் நாள், இவ்வளவு நாள் தியரியா பேசிட்டு இருந்த காமத்தை பிராக்டிகலாக செயல்படுத்துதல் எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு தெரியும் நாள் அதுதான், அந்த நேரத்தில் ஆணும் மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது, பெண்ணும் அதிருப்தி ஆகி கணவனை பார்க்க கூடாது.. இரண்டுமே ஆபத்து.. இப்படி தான் ஆகும் இதுதான் இயல்பு, மறுநாள் காலையில் ஒரு கூட்டமே உங்களை கொத்திப்பிடுங்க காத்திருக்கும் என்னாச் என்னாச் என்னாச் என்று!, ஒன்னுமே ஆகலன்னு மட்டும் சொல்லிட்டா போதும் ஒவ்வொருவரும் தன் பராக்கிரம பலத்தை எடுத்துக்காட்டாக சொல்லி இன்னும் குற்ற உணர்ச்சி கொள்ள வைத்துவிடுவார்கள், actually அவிங்களுக்கும் இப்படிதான் நடந்திருக்கும் இருந்தாலும் அதை வெளியில் சொல்வது மதிப்பு குறைவான விஷயம் என்பதால் சொல்ல மாட்டாங்க இரு பாலருமே,! முதலிரவு இப்படி முடிவதற்கான காரணம் ஒரு பெண்ணின் நிர்வாண உடல் ஆணுக்கு பழக வேண்டும், அதை பற்றிய ஆச்சர்யம் கொஞ்சமேனும் உடைந்தால் தான் அவனால் அடுத்த கட்டத்திற்கே செல்ல முடியும் இதற்கு குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் எடுக்கும் அதற்குதான் இரண்டாம் மறுவீடு என்று தாய் வீட்டில் மூன்று நாட்கள் தங்கச் சொல்வார்கள் so பொறுமை காக்க!.

இப்ப அடுத்த பிரச்சினை.. எல்லாம் சுமுகமாக முடிந்த பின்னர் கொஞ்ச நாள் கழித்து கணவர் வழக்கம் போல வேலைக்கு போக ஆரம்பிப்பார், அதுவரை ஏதோ சந்தோசமாக இருந்தது பறிக்கப்பட்டு தனிமையில் தள்ளப்பட்டதாக தோன்றும், இன்னும் கொஞ்ச நாள் கழித்து அதாவது மூன்று மாதம் கழித்து, மொத்த வாழ்வும் சூனியமாக தோன்றும் கணம் அது, வேலைக்கு போகும் மனைவிகள் இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பித்துக்கொள்வார்கள், வீட்டிலேயே இருக்கும் மருமகள் தான் ஐயோ பாவம், ஏன்னா பேச ஆளே இருக்காது, வீட்டு வேலை செய்வது தான் ஒரு வேலையாகவே இருக்கும் தினமும் இதையே தானே செய்கிறோம் என்று சலிப்பு தட்ட ஆரம்பிக்கும்,

இப்ப அடுத்த பிரச்சினை, வீட்ல போர் அடிக்குதுன்னு கணவனிடம் போன் பேசலாமே ன்னு போன் பண்ணினால் வரக்கூடிய பதில் ”போன வை நான் அப்பறமா கூப்பிடறேன்” முதல் நிராகரிப்பு அது, அதுக்கு அவர்கள் ஆயிரம் காரணம் சொல்வார்கள் ஆரம்பத்தில் இது அப்படியே பழகி பழகி பழகி ஒரு கட்டத்தில் ”எதுனா முக்கியமா இருந்தா மட்டும் போன் போடு அடிக்கடி தொந்தரவு செய்யாத” என்று சொல்வதில் வந்து நிற்கும், நாம் ஏமாற்றப்பட்டதாக மனம் நம்ப வைக்கும், கல்யாணத்துக்கு முன்னாடி ”நீ பேசறது கேட்டுட்டே இருக்கலாம்ன்னு சொன்ன அதே வாய்தான் இப்போ தொனதொனன்னு பேசாம இருன்னு சொல்லும். இந்த சமயத்தில் மனைவிகளில் ஓவர் ரியாக்சன்களால் கணவர்களுக்கும் ஒருவித எரிச்சல் வரும், இப்போது எல்லா பழியையும் ஆண்கள் மேல போட்டு தப்பித்து விட பார்ப்பார்கள் பெண்கள், ஆணுக்கு தன் மேல் குற்றம் சொல்வதை ஒத்துக்கொள்ளவே முடியாது, உறவில் விழும் முதல் விரிசல் இது.., இந்த இடத்தில் இருந்து வாழ்க்கையை சரியாக கொண்டு போக தெரியாத இருவருமே பிரிந்துதான் ஆக வேண்டும். இதுக்கு காரணம் கல்யாணத்துக்கு முன்னாடி போன் பேசியதா என்றால் நிச்சயமாக இல்லை.. பேசவில்லை என்றால் இதே பிரச்சினை ஒரு இரண்டு மாதம் கழித்து வரும் அவ்வளவுதான். இந்த இடைப்பட்ட காலத்தில் கர்ப்பமான பெண்கள் வாழ்க்கை முற்றிலும் வேறு தளத்தில் பயணிக்கும், கர்ப்பிணி பெண்ணின் மனநிலைக்கு தனி பதிவே தேவைபடுவதால் இன்னொருநாள் சொல்கிறேன்.

இப்ப அடுத்த பிரச்சினை கல்யாணமான ஆறே மாதத்தில் தனக்கு பிரைவேசி இல்லைன்னு தனிக்குடித்தனம் போகும் பெண்கள் போல் முட்டாள் இந்த உலகத்திலேயே இல்லை, மாமியார் கூட சண்டை போடுவது நாத்தனார் கூட சண்டை போடுவது எல்லாம் நம் சுயத்தை நிலை நிறுத்திக்கொள்ளும் விடயமாக இருக்கலாம் இந்த நேரத்தில் யாருக்கு சப்போர்ட் செய்யணும்ன்னு கணவனை தர்மசங்கடபடுத்தக்கூடாது, பெண்கள் சண்டைகளை பெண்களோடு முடித்துக்கொள்ளனும், கூட்டத்தில் வாழ்ந்தவனை தனியா பிரித்துக் கொண்டு வந்து வாழ்வதென்பது கத்தி மீது நடப்பது போல் ஆபத்தானது, கல்யாணம் முடித்த ஆண்கள் நிம்மதியாக இருக்கணும் இல்லையேல் அந்த நிம்மதிக்காக அவன் தேர்ந்தெடுக்கும் வழிகள் ஆபத்தாக அமையும்,

இப்ப அடுத்த பிரச்சினை. கணவர்களே! ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு இரண்டு மணி நேரமாவது வீட்டிலே இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள் முக்காவாசி பிரச்சினை வரவே வராது, நீங்கள் தூங்கும் நேரம் சாப்பிடும் நேரம்லாம் இதில் சேர்த்தி இல்ல, நண்பர்களோடு போகணும்ன்னு தோணும் ஆனா பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்ல இருக்காளே என்ன பண்றது, பொண்டாட்டி தாசன் என்று நண்பர்கள் கேலி பேசத்தான் செய்வாங்க, சொல்லிட்டு போறாங்க, உங்க பொண்டாட்டிக்கு தானே தாசனா இருக்கிங்க தப்பே இல்ல,

அப்பறம் மனைவிகளே! ஓட்டு மொத்த அன்பையும் கணவன் மீது கொட்டாதிர்கள், மாமியார் உங்களை கரிச்சு கொட்ட இதுவே காரணமாக கூட அமையும், அதாவது பாசமாக இருக்கின்றேன் என்பதை எஸ்டாபிளிஷ் செய்யவேண்டாம், பிக்காஸ் இந்த அன்புக்கு கணவனால் ஈடுகட்ட முடியாது விச் மீன்ஸ் நம்மை போல் பாலிஷாக பேச அவனுக்கு தெரியாது, அவன் அப்படிதான் டிசைன் செய்யப்பட்டிருக்கிறான், மேலும் கணவர்களிடம் சொல்லகூடாத ஒன்று அவன் தாயை பற்றிய குறைகள், அவன் தாய் பேயாக இருந்தாலுமே அவனுக்கு அவள் தாய், அவளை ரிபிளேஸ்மென்ட் செய்யவேண்டும் என்று நினைக்கவே கூடாது, பாசத்தை பங்குபோட வரவில்லை பகிரவே வந்திருக்கிறோம், அப்பறம் கணவனின் முகத்தை வைத்தே அவன் எந்த உணர்ச்சியில் இருக்கிறான் என்று நம்மால் எளிதில் சொல்லிவிட முடியும் ஆனால் அவர்களால் எவ்வளவு மெனக்கட்டாலும் முடியாது, ஆண் ஏன் இப்படி இருக்கிறான் என்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் ”அதான் ஆண்’

சரி இதற்கான தீர்வுதான் என்ன? கல்யாணம் முடிந்த முதல் மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்கு யாருமே கணவன் மனைவி அல்ல, இருவரும் பரஸ்பர சொரிதல்களுக்கு பயன்படும் கருவி அவ்வளவுதான். இதை மட்டும் புரிந்துகொண்டால் போதும் அதை விட்டுட்டு நான் அதிக பாசத்தை கொட்டுகிறேன் அவர்(ள்) கொட்டவில்லை, என் மேல அக்கறையே இல்ல, இந்த மாதிரிலாம் சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிர்கள், நாம நம்ம அப்பாவையும் அம்மாவையும் அப்பறம் சொந்தத்தில் உள்ளவர்களை ஐடியல் கப்பிளாக எடுத்துக்கொள்வது முதல் பிரச்சினை, அவங்கள மாதிரி ஈருடல் ஒருயிரா நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என்ற கேள்வி வேற வரும், actually அன்பு பாசம் நேசம் கரிசம் அக்கறை எல்லாம் எடுத்த உடனே படார்ன்னு வந்திடாது அதற்கு கால அவகாசம் வேண்டும் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள். அதிக பட்சமாக ஏழு வருடங்கள், அதற்கு பின் தான் இணை என்பவர்கள் தன் உடலின் ஒரு பகுதி என்று ஆவார்கள், குறிப்பறிந்துசெயல்படும் கணவன் அண்ட் மனைவி எல்லாம் இப்போதுதான் சாத்தியம்,

எழுதியவர் : செல்வமணி - இணையம் - மீனம்மா (1-Oct-15, 8:01 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 725

புதிய படைப்புகள்

மேலே