நான் இதுவா - 2
நான் .. இதுவரையில்
என்னிடம் உள்ள
அச்சங்களை ...
கண்டு அஞ்சியே
வந்திருக்கிறேன்..
பரிசோதனைக் கூடத்து
கத்தி கொண்டு
செத்துப் போன தவளையின்
உடல் கிழித்துப் பார்ப்பது போலன்றி
உயிருள்ள ..அசைகின்ற..ஒன்றாக
என்னை அச்சுறுத்தும் அச்சத்தை
உற்றுப் பார்க்கிறேன்..
அதை எதிர்கொள்ளும் தைரியமோ ..
வெற்றி கொள்ளும் சாதுர்யமோ..
வருவதையும் காண்கிறேன்..
என்னுடைய "நான்" என்பதில்
திருட்டுத்தனமாய் ..
குடியேறி விட்ட அதனை..
நான் உதறித் தள்ளுகிறேன்..
அச்சம் இல்லாத "நான் "
இப்போதுதான் பிறக்கிறேன்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
