கவித்துளிகள் - 3
கவித்துளிகள் - 3
கைகள் கூடுதல்
கைகூடாத வரை
காதல் இன்பம்
குறைவதில்லை
கனவில்!!! - ஒருதலைக்காதல்!!!
தனிமைக் கடலில்
கற்பனை ஓடம் கொண்டு
கருத்து வலை வீசி
கவிதை மீன் பிடிக்கும்
கலைஞன் - கவிஞன்!!!
கற்பனை வெள்ளத்தை
கருத்துமடை போட்டு
கடந்த நிகழ்வுகள் கொண்டு
கவி விளைக்கும்
வல்லமை - புலமை!!!
எண்ணிய ஆசையை
அடைந்து துய்க்கும் வேளை...
இடைவிடாத எண்ண போராட்டம்
இயல்புநிலை திரும்பும்
சில நொடி இதம் - இன்பம் !!!
- பா.வெ.