என்னவள் யார்
மகிழ்உந்தில் போக பணம் இல்லை என்றாலும்
பேருந்தில் போக பணக் குறைவு இல்லை என்பதால் பேருந்தில் போன காலம் அது,
வேடிக்கைப் பார்ப்பது வாடிக்கை என்பதால்
ஜன்னல் ஓர இருக்கையில் நான் இருக்கையில்
அருகில் இருந்த இருக்கை என் மனம்போல் காலியாய் இருந்தது,
அதில் பதினாறு வயது கன்னி ஒருவள் அமர்ந்தாள்
அம்பியாய் பிறந்த நானும்
அடுத்த நொடியே
அம்பிகாபதியாய் மாற
அருகில் அமர்ந்த ரதியோ எனக்கு
அமராவதியாய் தெரிய சில காலத்துளி கடந்தது
அவள் கைப்பேசியை பார்த்தபோது காலம் வலி கொடுத்தது
அதில் அவளின் காதலன் உடன் அவள் புகைப்படம்
அடுத்த நொடியே காணமல் போது
அம்பிகாபதி காதல் வந்த தடம்
என்னவள் யார் என்று தேடவே இந்தனைஆண்டுகள் போனால் பின் எத்தனை ஆண்டுகள் என்னவள் உடன் நான் வாழ