கடலின் நடுவில்

நாங்கள் வீசிய வலையில்
மீன்கள் சிக்குகிறதோ
இல்லையோ
இலங்கை கடற்படை
வலையில்
நாங்கள் சிக்கி விடுகிறோம்

இழுத்துச் சொல்லும்
அலைகளுக்குத் தெரிவதில்லை
நல்லவர்கள்
கெட்டவர்கள்

தனக்கென்று
சுயபுத்தி இல்லாமல்
வானத்தின் நிறத்தை
அப்படியே பிரதிபலிக்கும்
கடலுக்கு எப்படிப் புரியும்
எங்களின் வாழ்க்கைப்
போராட்டம்

இப்பொழுதெல்லாம்
சிப்பிக்குள்
முத்தாக இருப்பது
எங்களின் கண்ணீர்த் துளிகளே!

எழுதியவர் : padithathil pidiththarhu (6-Oct-15, 1:56 pm)
Tanglish : kadalin naduvil
பார்வை : 76

மேலே