நீயே நான்

கடல் அலையோடு
நுரைகள் சேர்ந்து
அதனினுள் தொலைந்த
பாத சுவடாய் !!..
காகிதத்தில்
எழுதிய மடலோ
எரிந்து போன
சாம்பல் பொடியாய் !!..
வீசும் காற்றின்
வேகம் கூடி
மறைந்து போன
தென்றலை போல் !!..
ஒளி இழந்த
சூரியனை கொண்டு
பொலிவிழந்த
பூட்களை
மலர செய்வது
எவ்வாறு கடினமோ !!....
அதுபோல் தான்
உனை இழந்த
என் இதயமும்
உயிர்தெலுவது கடினமே !!....
இவ்வுலகில் !!.....