சோகம் நீங்க சொல்லுகிறேன்

விடிந்தும் விடியாது!!!!
-----------------------------
கண்கள் திறக்காமல்
விடிந்தும் விடியாது
எந்த இருளும் அகலாது..
எழுந்து நடக்காமல்
தூரம் குறையாது
நீந்தி செல்லாமல்
ஒரு கரையும் வாராது..
காத்து கிடந்தாலும் உன்னை நீ மாற்றாமல்
காலம் மாறாது..
வீழ்ந்து கிடந்தாலும்
துடித்து எழுகின்ற இதயமில்லாமல்
வெற்றி கிடையாது..
மனம் வலியில் துடித்தாலும்
கடந்து செல்கின்ற எண்ணமில்லாமல்
சோகம் நீங்காது.