கவலை

கவலை
நிறைவுப் பெறாத ஆசை
நிம்மதியை தொலைத்த நினைவுகள்
சோகத்தை மறைக்கும் முகம்
துக்கத்தைத் தொலைத்த இரவுகள்
சொல்லிக்கொண்டே இருக்கும் மணம்
அழுகைக்கு அடிமையாகி
அமைதியைத் தேடின தினங்கள்
கடவுளை வெறுத்து
கல்லறையைத் தேடின
சில நாட்கள்
பித்தம் பிடித்து
மெய் மறந்து
திரிந்த பல நாட்கள்
திசைகள் மறந்து
நாடோடியாய் திரிந்த
சில தினங்கள்
பலத்தை இழந்து
பரிதாபமாக இருந்த
சில நாட்கள்
மனிதனை மயக்கி
மரணத்தைக் காட்டும்
கவலையை மறந்து
இனிமையாக வாழ்வோம்
- கௌதம்