எழுதுகிறேன்..........

எழுதுகிறேன்..........
ஆழமாய் தமிழ் படித்து
ஆணித்தனமாய் சொல்லெடுத்து
எதுகை மோனை எடுத்து வைத்து
உனை அப்படியே கவரும்
ரசனைக்குரிய கவி
நானல்ல என்று....
இருப்பினும் எழுதுகிறேன்
அளவாய் தமிழ் படித்து
உண்மையாய் உன் நினைவெடுத்து
கண்ணீர் கறையை எடுத்துவைத்து
உனை முழுவதுமாய் நேசிக்கும்
ரசனைக்குரிய வியர்வைத்துளி
நான் மட்டுமே என்று...............

எழுதியவர் : s.s (4-Jul-10, 5:47 am)
சேர்த்தது : s.s.raj
Tanglish : ezhudhugiren
பார்வை : 706

மேலே