காதல் குறுங்கவிதை தொடர் -07 -முஹம்மத் ஸர்பான்

பாதையில்லாத என் வாழ்வில்
உருவான முதல் பயணம் உன்
இதயத்தில் என்னை தொலைக்கும் காதல்

அழகில்லாத நான் உன்
குழந்தையாக மாற ஆசைப்படுகிறேன்.
என் தாயாக என்னை தாலாட்டுவாயா

காலம் உனக்கு இன்று
வரம் தேடிக் கொண்டிருப்பதால்
என் கண்களில் ஈரக் காயம்

என் நெஞ்சின் தூதினை
சுவாசம் உன்னை தொட்டுப் பேசும்.

பதில் சொல் அன்பே!!என்
கவிதைக்கு அழத் தெரியாது

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (10-Oct-15, 7:18 pm)
பார்வை : 183

மேலே