காதல் வலிமை தரும்

காதலியே நீ
வலிகளை தருகிறாய்
ஆனால்
காதல் எனக்கு
வலிமையை தருகிறது

உன் மவுனம்
சில நேரம்
சம்மதமும்
சில நேரம்
சங்கடமும் தருகிறது

உன் கொடுஞ்சொற்கள்
யாவும் என்னை
கொன்றுவிட போவதில்லை
விழிகளுக்கு என்ன
இமைகளா பாரம்??


என் நுரையீரலுக்குள்
நுழைந்த காற்றே!!!!
என் இதயம் வரை
சென்று வா,,,,,,
அப்போது தான்
நீ எப்படி இருக்கிறாய்
என்பது தெரியும்!!!!!!

எழுதியவர் : வேலு வேலு (10-Oct-15, 6:54 pm)
பார்வை : 105

மேலே