கவிதையாய் வாழும் வாலி

வாலி நீ
கவித்தேன் நிரம்பிய வாளி

தமிழகம் இழந்தது வாலியை
தமிழ் அகம் இழந்தது வேலியை

தள்ளாடல் இல்லாது
சொல்லாடல் கொண்டு
வில்லாடல் செய்தவனே

பத்தாயிரம் பா இயற்றி
சொத்தாக
முத்தாயிரமாய் கவி தந்து
வித்தாயிரம் நெய்தவனே

எதுகை உன் கழுத்துமூலம்
குரலில் விளையாடியது
மோனை உன் எழுத்துமூலம்
விரலில் கலையாடியது

கவிதை விரா மீன்களோடு
கடல் சுறா மீன்களும்
பெருமை கொண்டது
நீ பிராமின் என்பதால்

விண்ணில்
இந்த கொம்பனை காண
விழைந்தது கம்பனோ ?
இவன்
கண்ணதாசன் வழிவந்த
பிம்பனோ ?

நீ பந்து விளையாடும்போது
என் நினைவு வந்து விளையாடும்
நீ வாலிபால் ஆடினால் என்றவனே

என்னை தமிழ் காட்டில்
தவிக்கவிட்டு சென்றவனே
நன்றிஎனும் வார்த்தையினை
வென்றவனே

என்னைவிட உன் கவிதை
எமனுக்கு பிடித்துவிட்டதோ ?
உன்னை பிடித்துக்கொண்டான்

திரும்ப வாராயோ
திரைப்பாடல் தாராயோ
திரையுலக திருவள்ளுவனே
வான் திரை நீக்கி
பிறையாக வாராயோ வல்லவனே

குருவே சரணம்

எழுதியவர் : குமார் (10-Oct-15, 9:54 pm)
பார்வை : 238

மேலே