மாட்டு முயற்சி

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்
கிழவனைத் தூக்கி மடியில வை
என்ற கதையாகி போனதா சாமானியன் வாழ்க்கை..?

உங்கள் கொள்கைகளை
உங்கள் கூட்டத்திற்குள்
வைத்துக் கொள்ளுங்கள்!

மதம் வேறு அரசியல் வேறு
என்பதை அறியாத மடையர்களா நீங்கள்...?

மாட்டிறைச்சியிலா உங்கள்
மதிப்பீடுகளை மாட்டி வைத்திருக்கிறீர்கள்...!

மனிதனை மதிக்கத் தெரியாமல்
மாடுகளைக் காப்பாற்றி என்ன செய்வீர்கள்...?

கவனிக்க வேண்டிய ஆயிராமாயிரம் பிரச்சினைகளை
கிடப்பில் போட்டுவிட்டு மடையைத் திருப்பும் மந்தினிகள்!

மாடு என்பதற்கே செல்வம் என்றுதானே பொருள்
சக மனிதனை விட செல்வமே முக்கியப்படுமோ...?

விவசாயத்திற்கும் பாலுக்கும் பெரும்பங்கான மாடுகளை
அழிந்துபோகாமல் இருக்க மாடுவதை நிறுத்தம் மதக்கோட்பாடானது..!

இன்று அழிந்துக்கொண்டிருக்கும் விவசாயத்தையும்
தற்கொலைப் புரிந்துக் கொண்டிருக்கும் விவசாயத்தையும்
கண்திறந்து பாராமல் மாடுகளைக் காப்பாற்ற மனிதர்களையும் அழிப்போமா...?

மாடுகளைக் காப்பதில் தவறில்லைதான் ஆயினும் அதனை
மாட்டு மூளையோடு அணுகுவதால்
யாருக்கும் நன்மை விளையப்போவதில்லை...!!

எழுதியவர் : அலெக்சாண்டர் (11-Oct-15, 12:44 am)
Tanglish : maattu muyarchi
பார்வை : 64

மேலே