பெண்ணுக்கு பெண்ணே எதிரி
பெண்ணே,
நீ பேசினால் வாயாடி
பேசாவிட்டால் பிகுகாரி
சிரித்தால் சிங்காரி
சிரிக்காவிட்டால் சிடுமூஞ்சி
அழுதால் சாகசக்காரி
அழாவிட்டால் அழுத்தக்காரி
பெண்ணே உன் இனமே உனக்கு எதிரி
உன் இனத்திற்காக வாழ்ந்தது போதும்
இனி உன் மனதிற்காக மட்டுமே வாழ்!