எங்கள் நாடு தமிழ் நாடு

இந்தியா என் தேசம்
என்றேன் பெருமிதத்தோடு
நான் ஹிந்து என்றேன்
ஆன்மீக உணர்வோடு
என் தேசம் எந்த விளையாட்டிலும்
தோற்பதை நாம் விரும்பியதில்லை
தோல்விகளை ரசித்ததும் இல்லை
வெற்றியில் இந்தியனாய் ஆனந்தம்
அடைந்ததோடு முடியவில்லை
தோல்வியிலும் அழுதோம்
துடித்தோம் துவண்டு போனோம்
பாகிஸ்தான் எங்களுக்கு பக்கத்தில் இல்லை
எங்கள் நகரத்தில் வன்முறையை
நிகழ்த்தியதும் இல்லை
ஆனாலும் எங்களுக்கு பிடிக்காது
அந்த தேசத்தை, காரணம்
நாங்கள் இந்தியராய் இருந்ததால்
ஆனால் இந்த ஹிந்திய தேசம்
என்ன செய்தது எமக்கு ?
எங்களின் எந்த துயரத்தையும்
துடைக்கவில்லை ஏன் ?
நதி நீர் பெற முடியாமல்
நாதியற்று கிடக்கிறோம்
மீனவன் உயிர் உடமை
காக்க முடியாமல் முழிக்கின்றோம்
அணு உலை நியூட்ரினோ
கெயில் மீத்தேன்
என வாழ்வாதார
பாதிப்பு திட்டங்கள்
ஜல்லிக்கட்டு தடை
குமரிக்கண்ட ஆய்வு
வெளியிட மறுப்பு
சிந்துவெளி நாகரீகம்
தமிழரதல்ல யென எதிர்ப்பு
போன்ற பண்பாடு அழிப்பு
இலங்கையோடு கூட்டு சேர்ந்து
எம் தமிழ் உறவுகளை
கொன்று குவித்து ஓர்
இனப்படுகொலை நடத்தி முடித்ததை
தவிர வேறென்ன செய்தது
ஹிந்திய தேசம் ?
ஹிந்தியன் என்ற என்னை
ஹிந்தியனாக பார்க்காத இந்த
ஹிந்திய தேசத்தில் இனியும்
ஹிந்தியனாகவோ ஹிந்துவாகவோ
அடையாளப்பட்டு வாழ்வதில் அர்த்தமில்லை !
நாம் தமிழர் என்றே
எங்கும் முழங்குவோம்
எங்கள் நாடு
தமிழ் நாடு
என்றே கூறுவோம்