நலந் தரும் நவராத்திரி நாயகி 2

----அபிராமி அந்தாதி ----

சுப்பிரமணியம் எனும் அபிராமிப் பட்டர் தேவியின் தியானத்தில்
ஆழ்ந்திருந்த போது மன்னர் சரபோஜி இன்று என்ன திதி என்று ஒரு
அமாவாசை தினத்தில் கேட்கிறார். சித்தாகாசத்தில் ஆயிரம் நிலவுக்கு
ஒப்பான அன்னையின் வடிவின் தியானத்தில் களித்திருந்த பட்டர்
இன்று பௌர்ணமி என்று சொல்லிவிடுகிறார் .இன்று இரவு நிலவு வருமா
என்று மன்னர் கேட்க ஆம் நிலவு வரும் என்றும் சொல்லி விடுகிறார் பட்டர் .
பக்தனின் கூற்றை மெய்ப்பிக்க அமாவாசை இரவில் தன் தாடங்கத்தை
(காதணி ) வானில் விட்டெறிந்து நிலவை நிறுவுகிறாள் அபிராமி அன்னை .
ஜொலிக்கும் தாடங்கத்தால் லீலைகள் புரியும் வடிவினள் என்று அன்னையின்
ஆயிரம் நாமங்கள் சொல்லும் .
அநேக கோடி பிரம்மாண்டங்களைப் பிறப்பிப்பவள் என்றும் அது அவளைப்
போற்றும் .

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோ டெ னைக் கூட்டினையே !

300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பட்டரின் காலத்திலேயே இவ்வாறு
வருந்திச் சொல்லும் நிலை.
அன்னை அபிராமி நம்மை காக்கட்டும் . காக்கும் அவள் வடிவை அடுத்த
பதிவில் பார்ப்போம்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-Oct-15, 9:35 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே