தோல்வி கண்டு துவளாதே

கண்கள் இல்லாமலே
கவிதை எழுதும்
ஆங்கில கவிஞனை போல

ஒரு காலை இழந்தாலும்
ஓடுவதை நிறுத்தாத
ஒரு இளைஞனை போல

விழுந்ததும் எழுந்து நடக்கும் ஒரு
குழந்தையை போல

அம்புகள் மார்பை
துளைத்த போதும்
வெற்றிக்கு வித்திடும்
ஒரு வீரனை போல

மாலையில் மரணம்
என்று தெரிந்தும்
மலரும் மலரை போல

நட்புகள் உயிர் கொடுக்க
பிறந்த நம்பிக்கையே

தோல்விகள் வந்தாலும்
துவண்டு விடாதே

வறுமைகள் வந்தாலும்
வாடி விடாதே
நம் முயற்சி
என்னும் பயணத்தில்
வெற்றி என்பது
வெகுதூரமல்ல

தோழர்களே! தோல்விகளை துவைத்து
காயப்போடுவோம்
அது வெற்றி என்னும்
வெண்ணிற ஆடையாகட்டும்
அந்த ஆடை நமக்கு
உடையாகி உடலோடு
ஒட்டிய கவசகுண்டலம்
ஆகட்டும்

உனக்குள்ளே வெற்றி
என்னும் விதை
விதைக்கபட்டுள்ளது
அதை முயற்சியை
கொண்டு முளைக்கவை
நாள்தோறும் நம்பிக்கை
என்னும் நீருற்று
அதில் தினம்
வெற்றி என்னும்
பூ பூக்கும்

எழுதியவர் : வேலு வேலு (14-Oct-15, 9:19 am)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
பார்வை : 178

மேலே