ஆசை தீபிடித்த மூங்கில்வனம் 555

அன்பே...
நீ நெடுந்தொலைவு விடிவெள்ளிபோல்
ஒரு பார்வை பார்த்தால் போதும்...
என்னை நீ கடக்கும் நேரத்தில்
நான் பனிமழையாவேன்...
என்னில் உருகும் ஒவ்வொரு
பனி துளியிலும்...
உன் முகத்தை பதுக்கிவைத்து
தங்க சுடராவேன்...
நீ அருகிருந்து
உரசிகொண்டால்...
ஆசை தீபிடித்த
மூங்கில்வனம் ஆவேன்...
நான் அப்பொழுதும்
புல்லாங்குழலாகி...
அன்பே உன்னையும் நம்
காதலையும் பாடும் கவியாவேன்...
நாளை பூக்கும் பூக்கள்
மணமாலையாகும் நம் தோள்களில்...
நீ சம்மதித்தால்.....