காதல் குடும்பம்

புதனாக என் புன்னகை
வெள்ளியாக என் வெட்கம்
பூமியாக என் பூரிப்பு
செவ்வாயாக என் செழிப்பு
வியாழனாக என் விவேகம்
சனியாக என் சந்தோசம்
யுரெனசாக என் யுக்தி
நெப்டியூனாக என் நெஞ்சம்
புளூட்டோவாக என் புதினம்.
மொத்தத்தில் சூரியனாக நீ..
உன்னை சுற்றி நான்...!!!