தீக்குள்ளே விரல் வைத்தால் -கார்த்திகா AK
![](https://eluthu.com/images/loading.gif)
தொடுதிரை வசமான விரல்கள்
நகக் கணுக்களில் அழுக்கு படா
வெளிறிய வேலை கொஞ்சம்
பற்கள் தெரிந்தால் சிரிப்பு
அது கோணலாய் இறுகிய இதழ்கள்
மேற்கத்திய கலாச்சாரம்
மேலை நாட்டு உடுப்பு
பருகுவதற்கு பழரசம்
உண்பதற்கு பீட்சா
நாகரிக கொழுப்பிற்கு இரையாகின்றன
பண்பாட்டுச் சோற்றுப் பருக்கைகள்
எட்டு முழம் கட்டினால்
வராத நாகரீகம்
கைக் குட்டைத் துணியில்
வருவதில் என்ன மதிப்பு
காசிருந்தால் சட்டத்தையும்
விலைக்கு வாங்கும்
திமிரிடம் தோற்கின்றன
தேவதைகளின் நீதி!
எதிர்வரும் இன்னுமோர் உலகினில்
ஆரியம் திராவிடம் மாறலாம்
அற்பர்கள் வீணர்கள் கற்பிக்கலாம்
பண்பாடு தொலைந்து போய்விடில்
மனிதம் எங்கிருந்து மீட்டெடுக்கப்படும்??