வாழ்வே வரம்
வாழ்வே வரம் என்பர் பலர்
சிந்தனை செயல் நலமானால்
வாழ்வே வரமாகும் வளம் தரும்
வனமாகும் பூங்காவனமாகும்..
வள்ளுவன், பாரதி காந்தி காட்டிய பாதை
அது அன்பெனும் அறவழி பாதை
அது வழி நடப்பின் விளையும் நன்மை
இது அனுபவம் கூறும் செம்மை.
அன்பெனும் ஊற்றை மனதில் கொண்டு,
மாறாமல் மறவாமல் அளிக்கும் காலை,
மகழ்ச்சி பெருகி கொப்பளித்து,
வாழ்வாங்கு வாழ்வோம் நோய் அண்டாது .
மானுடத்தின் விந்தை சிந்தனை
மற்றவர் வாழ சிந்திப்பின்
மனம் புனித கோயிலாகும்.
மனிதன் தெய்வமாகி போவான்
மனிதம், நேர்மை, அன்பு, பாசம்
நெஞ்சில் நிறைத்து வாழும் மனிதர்தம்
வாழ்வே வரமாகும் அவர் உறையும்
இம்மண்ணும் புண்ணிய பூமியாகும்.