தமிழ் மொழி
பாரதி சொல்லா புரட்சியோ
அவ்வை கூறா நீதியோ
கம்பன் பாடா காதலோ
இளங்கோ மொழியா உவமையோ
அன்பே பண்பென்று உரைத்த வள்ளுவன் விளக்கா விடுகையோ
அறிவியலும் அரசியலும் அன்பும் அறமும்
காதலும் களவும் வாழ்வும் நெறியும்
இல்லை என்று ஏதும் இல்லை
இனிது இனிது செந்தமிழ் இனிது
அரிது அரிது முழுதும் கற்றல் அரிது