அழியா ஒவியம்
என் மனதில்
பல உறவுகளை
படம் வரைய தெரிந்த எனக்கு....
தெரிந்தது அதனை அழிக்கவும்...
படத்தை மட்டும் அல்ல
சில உறவுகளையும் கூட...
எனினும்
உன்னை அழிக்க முடியாத
காரணம் என்ன?
விடை தேடி அலையவில்லை...
புரிந்துக்கொண்டேன்...
உன்னை படம் வரைந்தது
அழிக்க அல்ல...
காலம் முழுதும் அதை
பொக்கிஷமாக வைத்துக்கொள்ள...
என் மனதின்
அலைவரிசையில் அழியாமல்
நிற்கும் ஒவியம் நீயடா....!!!